kavithai
மணவாளனாய் அவர் வருகின்றார் மணவாட்டியாம் உனைத் தேடி மணவாட்டி நீ ஆயத்தமா மணவாளன் பக்கம் வர ஓடி புத்தியில்லாக் கூட்டத்தார் பொழுதின்மேல் கவனம் வையார் புத்தியுள்ள கூட்டத்தாரோ பொழுதெல்லாம் கவனமாயிருப்பார் அகலிருக்கலாம் அனைவர் கையிலும் ஆனால், அது எரிய எண்ணெய் உண்டா? அல்லது புறப்படும் நேரத்திலே அவசரமாய் அடுத்தவரிடம் கடன்படுவோரா? வருகிறார் என்ற சத்தம் கேட்டும் விழித்து விளக்கினை கையிலெடுத்தும் அணைந்துபோகிறது தீவட்டிகளென்றால் அவரைச் சந்திப்பது அசாத்தியமாகிவிடுமே! ஆயத்தமானோர்க்கு மணவீடு திறந்திருக்கும் மணவாட்டிகள் என்ற வரவேற்பும் கிடைத்துவிடும் மணவாளன் அவரருகே உட்காரும் பாக்கியத்துடன் மகிழ்ச்சியாய் பரலோகக் காட்சியும் காணக்கிடைக்கும் புத்தியுள்ளவர்கள் உள்ளே பிரவேசித்தபின் பத்திரமாய் கதவுகள் அடைபட்டபின் ஆண்டவரே! ஆண்டவரே!! எனத் தட்டினாலும் அறியேன் என்பதுதானே அவர் பதிலாயிருக்கும்!