prayer guide

ஜெபக் கையேடு


கிறிஸ்துவின் கனிகள் மிஷனரி ஊழியங்கள்


இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். 2 இராஜா. 3:16


இந்திய தேசத்திற்காக ஜெபிப்போம்


எமது தரிசனம்

தேவனுடைய பெரிதான கிருபையால், கிறிஸ்துவின் கனிகள் ஊழியம், தேவ திட்டத்தின்படி 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 44 கோடி மக்கள் தொகை கொண்ட பீஹார், ஜார்க்கண்ட், உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களை, சுவிசேஷத்தின் மூலம் இயேசுவுக்குச் சொந்தமாக்குவதே எமது தரிசனம். 25 வருடத்திற்குள் 10 கோடி ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்குள் கொண்டுவரவேண்டும் என்ற உயரிய தரிசனத்தோடு செயல்பட்டுவருகிறோம். இந்த நான்கு மாநிலங்களில் 1500 ஆலயங்கள் கட்டவும், சுதேச மிஷனரிகளை உருவாக்க வேதாகமப் பயிற்சிப் பள்ளி அமைப்பதும் எமது நோக்கமாகும்.


கிறிஸ்துவின் கனிகள்

மிஷனரி ஊழியத்தின் ஊழியங்கள்

  • கைப்பிரதி ஊழியங்கள்
  • திரைப்பட ஊழியங்கள்
  • சிறுவர் ஊழியங்கள்
  • வாலிபர் ஊழியங்கள்
  • வீட்டுக் கூடுகைகள்
  • சபை ஊழியங்கள்
  • கருத்தரங்குகள்
  • கிராம ஊழியங்கள்
  • தனிநபர் ஊழியங்கள்
  • சிறைச்சாலை ஊழியங்கள்
  • சுதேச ஊழியர்களை உருவாக்குதல்
  • படைமுயற்சிக் கூட்டங்கள்

2023 ஆம் ஆண்டுக்கான - கிறிஸ்துவின் கனிகள் மிஷனரி ஊழிய

நிர்வாக அங்கத்தினர் மற்றும் பங்காளர் கூடுகை

ஜெபியுங்கள்

கைப்பிரதி ஊழியங்களுக்காக...

திரைப்பட ஊழியங்களுக்காக...

சிறுவர் ஊழியங்களுக்காக...

வாலிபர் ஊழியங்களுக்காக...

தனிநபர் ஊழியங்களுக்காக...

சுவிசேஷப் பயணங்களுக்காக...

கிராம ஊழியங்களுக்காக...

வீட்டுக் கூடுகைகளுக்காக...

சபை உருவாக்கும் ஊழியங்களுக்காக...

விடுதலை மற்றும் சுகமளிக்கும் கூட்டங்களுக்காக...

கன்வென்ஷன் கூட்டங்களுக்காக...

ஞானஸ்நானங்களுக்காக...

ஆடியோ பைபிள் ஊழியங்களுக்காக...

(படிப்பறிவு இல்லாத விசுவாசிகளுக்கு ஆடியோ பைபிள் கிடைத்திட)

கல்வியறிவுடையோருக்கு இலவச வேதாகமங்கள்

சுதேச மிஷனரிகளை உருவாக்கும் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி முகாம்களுக்காக...

ஆன்லைன் வேதாகம வகுப்புகளுக்காக...

சபை கட்டுமானங்களுக்காக...

வேதாகமப் பயிற்சி மையங்களுக்காக...

(சுமார் 500 பேர் தங்கி வேதாகமப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற நிலம் மற்றும் கட்டிடத்திற்காக)

மிஷனரிகளுக்கு வாகனங்கள் கிடைக்க...

இயற்கைப் பேரழிவு உதவிகளுக்காக...

சிறைச்சாலை ஊழியங்களுக்காக...


பீஹார்

பரப்பளவில் 12-வது இடத்திலும், சுமார் 13 கோடி மக்கள் தொகையினை உள்ளடக்கி, மக்கள் தொகையில் 2-வது இடத்திலும் காணப்படும் மாநிலம் இது. மேற்கில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தையும், வடக்கே நேபாள் தேசத்தையும், கிழக்கே மேற்கு வங்காளம் மாநிலத்தையும் மற்றும் தெற்கே ஜார்க்கண்ட் மாநிலத்தையும் எல்லையாகக் கொண்டது. இம்மாநிலம், 9 நிர்வாகப் பிரிவுகளாகவும் மற்றும் 38 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில், 11.29 சதவீத மக்கள் மாத்திரமே இன்றளவும் நகரங்களில் வசித்துவருகின்றனர்; மீதமுள்ள 88.71 சதவீத மக்கள் கிராமங்களிலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்துவருகின்றனர். 243 சட்டமன்ற உறுப்பினர்களையும், 16 இராஜ்ய சபா உறுப்பினர்களையும் மற்றும் 40 லோக்சபா உறுப்பினர்களையும் கொண்ட இம்மாநிலத்தின் தலைநகராகப் பாட்னா செயல்பட்டுவருகின்றது.

பீஹார் மாநிலத்தின் 58 சதவீத மக்கள் 25 வயதிற்கு உட்பட்ட இளம் தலைமுறையினரே; இந்தியாவில் இளம் தலைமுறையினர் அதிகம் வசிக்கும் மாநிலம் இது. இம்மாநிலத்தின் பிரதான மொழியாக ஹிந்தி பேசப்பட்டாலும், பெரும்பாலான கிராமங்களில் வசிக்கும் மக்கள், உருது, போஜ்புரி, மகய், மைதிலி, உராவன் போன்ற அநேக மொழிகளையே தாய்மொழியாகத் தொன்றுதொட்டுப் பேசிவருகின்றனர். முன்நாட்களில், நாகரீகம் நிறைந்ததும், அரசியல் மற்றும் கலாச்சாரங்களை அதிகம் பிரதிபலித்ததும், கல்வியால் உலக மக்களையே தன்வசம் ஈர்ப்பதுமாகத் திகழ்ந்தது இம்மாநிலம். புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக் கழகம் செயல்பட்டதும், புத்த மதம் தோன்றியதும் இம்மண்ணிலேயே. இம்மாநிலத்தின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே தங்கள் தொழிலாகச் செய்துவருகின்றனர். 2023 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தின் 81.99 சதவீதத்தினர் இந்து மதத்தையும், 17.7 சதவீதத்தினர் இஸ்லாமிய மதத்தையும், 0.05 சதவீதத்தினர் கிறிஸ்தவ மதத்தையும், 0.08 சதவீதத்தினர் புத்த மதத்தையும் மற்றும் 0.01 சதவீதத்தினர் சீக்கிய மதத்தையும் சார்ந்து வாழுகின்றனர். இயற்கை வளங்களும் தாதுக்களும் இம்மாநிலத்தின் சொத்துக்கள்.


மாவட்டங்கள் மற்றும் மக்கள் தொகை (தோராயமாக)

1 அராரியா - 2,830,000 2 அர்வால் - 700,000 3 அவுரங்காபாத் - 2,510,000 4 பாங்கா - 2,020,000 5 பெகுசராய் - 3,750,000 6 பாகல்பூர் - 3,030,000 7 போஜ்பூர்- 2,720,000 8 பக்சர் - 1,700,000 9 தர்பங்கா - 3,950,000 10 கிழக்கு சம்பாரண் - 5,100,000 11 கயா - 4,400,000 12 கோபால்கஞ்ச் - 2,570,000 13 ஜமுய் -1,770,000 14 ஜெகனாபாத் -1,130,000 15 கைமூர் - 1,620,000 16 கத்திஹார் - 3,070,000 17 ககரியா - 1,660,000 18 கிஷன்கஞ்ச்- 1,690,000 19 லக்கிசராய் - 1,000,000 20 மாதேபுரா- 2,000,000

21 மதுபானி- 4,500,000 22 முங்கர்- 1,400,000 23 முசாபர்பூர்- 4,800,000 24 நாலந்தா- 2,900,000 25 நவாடா- 2,220,000 26 பாட்னா- 6,570,000 27 பூர்ணியா -3,230,000 28 ரோஹ்தாஸ் - 2,740,000 29 சாஹர்சா- 1,900,000 30 சமஸ்திபூர் - 4,260,000 31 சரண் - 3,950,000 32 ஷேக்புரா - 1,400,000 33 ஷியோஹர்- 656,000 34 சீதாமர்ஹி- 3,420,000 35 சிவான் - 3,330,000 36 சுபால் - 2,230,000 37 வைஷாலி - 3,500,000 38 மேற்கு சம்பாரண்- 4,500,000

ஜெபக் குறிப்புகள்

தலைநகர்: பாட்னா மக்கள் தொகை: 130,725,310 மதங்கள்: கிறிஸ்தவர்கள்: 0.05% இந்துக்கள்: 81.99% முஸ்லீம்கள்: 17.70% புத்த மதம் : 0.08% சீக்கிய மதம் : 0.01% மாவட்டங்கள்: 38 மொழிகள்: உருது, போஜ்புரி, மகய், மைதிலி, உராவன்


1) மக்களின் இரட்சிப்பு, கல்வி மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்திற்காக ஜெபிப்போம். 2) இரட்சிக்கப்பட்டு பின்மாற்றம் அடையாமல் தேவனுக்குள் உறுதிப்படவும், ஸ்திரப்படவும் ஜெபிப்போம். 3) மூடநம்பிக்கை, பாரம்பரியம் , சடங்காச்சரக் கட்டுகள், கலாச்சாரச் சீரழிவுகளிலிருந்து விடுபட ஜெபிப்போம். 4)குழந்தை இறப்பு, பெண் சிசுக்கொலை மற்றும் சுகாதாரப் பிரச்சனைகள் மாறவும், சுகாதார மையங்களில் உள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்படவும் ஜெபிப்போம். 5) ஜாதி வெறி மாற மற்றும் குற்றங்கள் நடைபெறாமலிருக்க ஜெபிப்போம். 6) மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக மற்றும் வறுமை நிலை மாற,வேலையில்லா நிலை மாற தொழில் வளர்ச்சியை காண ஜெபிப்போம். 7)விவசாயிகளின் நலனுக்காக ஜெபிப்போம். 8) சுற்றுலா ஸ்தலங்களின் வருவாய் வளர்ச்சி அடைய ஜெபிப்போம்.


9) எல்லா அதிகாரிகளுக்காகவும் அரசியல்வாதிகளுக்காகவும் ஜெபிப்போம். 10) ஏழை மக்கள் மீதான சுரண்டல் முடிவுக்கு வரவும் ஜெபிப்போம். 11) இயற்கைச் சீற்றங்கள் மற்றும் சாலை விபத்துக்கள் ஏற்படாமலிருக்க ஜெபிப்போம். 12) இம்மாநிலத்தின் மக்கள் எழுப்புதல் அடையவும், இரட்சிக்கப்படாதவர்கள் மனந்திரும்பி சபைக்கு வரவும் ஜெபிப்போம். 13) இம்மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட, விக்கிரக ஆவிகள், அசுத்த ஆவிகள், பில்லி சூனிய வல்லமைகள் நிர்மூலமாக ஜெபிப்போம். 14) நக்சலைட்டுகளினால் மற்றும் ஜாதிக் கலவரங்களினால் அடிக்கடி உண்டாகும் சமாதானக் குறைவு மாற ஜெபிப்போம். 15) சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ள முடியாதபடி தடையாக இருக்கும் மனக்கடினம் மாற ஜெபிப்போம். 16) சுவிசேஷ எதிர்ப்புகள் மாற அவர்கள் மனம் திரும்ப ஜெபிப்போம்.


மேற்கு வங்கம்


வங்காள விரிகுடா சமுத்திரத்தினை ஒட்டியவாறு, இந்தியாவின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது இம்மாநிலம். கிழக்கே பங்களாதேஷ் தேசத்தினையும், வடக்கே நேபாள் மற்றும் பூடான் தேசங்களையும் மற்றும் தெற்கிலும், மேற்கிலும் இந்திய மாநிலங்களான ஜார்க்கண்ட், ஒடிசா, பீஹார், சிக்கிம், அசாம் போன்றவைகளையும் எல்லைகளாகக் கொண்ட இம்மாநிலம், சுமார் 9.1 கோடி மக்கள் தொகையினைக் கொண்டது. கொல்கத்தாவை தலைநகராகக் கொண்ட இம்மாநிலம் 5 நிர்வாகப் பிரிவுகளாகவும் மற்றும் 23 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது; அத்துடன், 294 சட்டமன்ற உறுப்பினர்களையும், 16 இராஜ்யசபா உறுப்பினர்களையும் மற்றும் 42 லோக்சபா உறுப்பினர்களையும் கொண்டது. பரப்பளவில் 13-வது இடத்திலும் மற்றும் மக்கள் தொகையில் 4 -வது இடத்திலும் உள்ள இம்மாநிலத்தில், பெங்காலி மொழியே பிரதானமான மற்றும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழி; என்றாலும், நேபாளி, உருது, ஹிந்தி, ஒடியா, சந்தாலி, பஞ்சாபி, இராஜஸ்தானி, தெலுங்கு போன்ற மொழிகளைப் பேசும் மக்களும் இம்மாநிலத்தில் வசித்துவருகின்றனர். பிரிந்து செல்லும் கங்கை நதியின் ஆறுகளான பாகீரதி மற்றும் ஹுக்லி ஆறுகளே இம்மாநிலத்தில் பாயும் பிரதானமான ஆறுகள். வெயில் நாட்களில் உச்ச நிலை வெப்பத்தையும் மற்றும் குளிர் நாட்களில் கடுங்குளிரையும் கொண்டது இம்மாநிலம். இம்மாநில மக்களில் சுமார் 70 சதவீதத்தினர் இந்து மதத்தினையும், அதைத் தொடர்ந்து 27 சதவீதத்தினர் இஸ்லாம் மதத்தினையும், 0.7 சதவீதத்தினர் கிறிஸ்தவத்தினையும், மற்றும் பிறர் புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம் போன்றவைகளையும் தழுவி வாழுகின்றனர். விவேகானந்தர் மற்றும் ரபீந்திரநாத் தாகூர் போன்றவர்கள் இம்மாநிலத்தில் பிறந்தவர்களே. இசை, நடனம் மற்றும் பாரம்பரியக் கலாச்சாரங்கள் இம்மக்களால் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டுவருபவை. 1793-ஆம் ஆண்டு பாப்திஸ்டு சபையின் மிஷனரி வில்லியம் கேரி காலணித்துவ ஆதிக்கத்திலிருந்த கொல்கத்தாவிற்கு வருகை தந்து, செராம்பூர் பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார்.


மாவட்டங்கள் மற்றும் மக்கள் தொகை (தோராயமாக)


1) அலிபுர்துவார்-1,491,250 2) பாங்குரா- 23,596,674 3) பீர்பூம் -23,502,404 4) கூச் பெஹார்- 22,819,086 5) டார்ஜிலிங்- 21,595,181 6) தக்ஷின் தினாஜ்பூர்-21,676,276 7) ஹூக்லி- 25,519,145 8) ஹவுரா -24,850,029 9) ஜல்பைகுரி- 22,381,596 10)ஜார்கிராம்- 21,136,548 11) கலிம்போங்- 2,251,642 12 )கொல்கத்தா 24,496,694

13) மால்டா- 23,988,845 14)முர்ஷிதாபாத்- 27,103,807 15 )நதியா- 25,167,601 16) வடக்கு 24 பர்கானாஸ்- 211,060,148 17)பாஸ்சிம் பர்தமான்- 22,882,031 18)பாஸ்சிம் மேதினிபூர்- 24,776,909 19)புர்பா பர்தமான்- 24,835,532 20) பூர்பா மேதினிபூர்- 25,095,875 21) புருலியா- 22,930,115 22) தெற்கு 24 பர்கானாஸ்- 28,161,961 23)உத்தர் தினாஜ்பூர்- 23,007,134


ஜெபக் குறிப்புகள்


தலைநகர்: கொல்கத்தா மக்கள் தொகை: 91,347,736 மதங்கள்: கிறிஸ்தவர்கள்: 0.72% இந்துக்கள்: 70.54% முஸ்லீம்கள்: 27.01% புத்த மதம் : 0.31% சீக்கிய மதம் : 0.01% பிற மதங்கள்: 1.34 % மாவட்டங்கள்: 23 மொழிகள்: நேபாளி, உருது, ஹிந்தி, ஒடியா, சந்தாலி, பஞ்சாபி, இராஜஸ்தானி, இராஜ்பன்ஸி, தெலுங்கு


1) ஜனங்களின் இரட்சிப்பிற்காகவும், சபைகள் மற்றும் மிஷனரிப் பணிகளின் மூலமாக சமூகத் தீமைகள் ஒழிக்கப்படவும் ஜெபிப்போம். 2) இந்தியாவில் அதிகமாக விக்கிரக ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் மேற்கு வங்காளம்; ஆகையால், விக்கிரக வல்லமைகள், மூட பழக்க வழக்கங்கள் நிர்மூலமாகவும், விபச்சாரம் மற்றும் போதைக்கு அடிமையான மக்களின் விடுதலைக்காகவும் ஜெபிப்போம். 3) தேவ கிருபையினால் இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு உண்டாக ஜெபிப்போம். 4) ஊழல், போதை பொருள், குழந்தைகள் மற்றும் பெண்களைக் கடத்தும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனம் திரும்ப ஜெபிப்போம்.

5) தற்கொலை எண்ணத்தை உண்டாக்கும் தீய ஆவிகள் இயேசுவின் நாமத்தில் கட்டப்பட ஜெபிப்போம். 6) சமூக சமத்துவம் மற்றும் நீதி அனைவருக்கும் சமமாக வழங்கப்பட ஜெபிப்போம். 7)அதிகாரிகளுக்காகவும் அரசியல்வாதிகளுக்காகவும் ஜெபிப்போம். 8) அனைத்து கிறிஸ்தவர்களும் தங்கள் பொல்லாத வழிகளை விட்டு மனம் திரும்பவும் தேவனின் கிருபை மேற்கு வங்காளத்தின் மீது இருக்கவும் ஜெபிப்போம்.


ஜார்க்கண்ட்


இயற்கை மற்றும் கனிம வளங்களால் நிறைந்தது இம்மாநிலம். கங்கை, சோன் உட்பட பல்வேறு நதிகள் பாயும் இம்மாநில மக்களின் பிரதான தொழில் விவசாயமே. கிழக்கே மேற்கு வங்காளம் மாநிலத்தையும், மேற்கே சத்தீஷ்கர் மாநிலத்தையும், வட மேற்கில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தையும், வடக்கே பீஹார் மாநிலத்தையும் மற்றும் தெற்கே ஒடிசா மாநிலத்தையும் எல்லையாகக் கொண்ட இம்மாநிலம், பரப்பளவில் 15-வது இடத்திலும் மற்றும் 3.2 கோடி மக்களுடன் மக்கள் தொகையில் 14 வது இடத்திலும் உள்ளது. ராஞ்சியைத் தலைநகராக் கொண்ட இம்மாநிலம் கனிம வளம் மிகுந்தது; எனினும், 40 சதவீத மக்கள் இன்றும் வறுமை நிலைக்குக் கீழேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்; இம்மாநிலத்தின் 24 சதவீத மக்கள் நகரங்களிலேயும், 76 சதவீத மக்கள் கிராமங்களிலும் வசித்துவருகின்றனர். இம்மாநிலத்தின் 20 சதவீத குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைபாடுள்ளவர்களாகவே காணப்படுகின்றனர். 81 சட்டமன்ற உறுப்பினர்களையும், 6 இராஜ்யசபா உறுப்பினர்களையும் மற்றும் 14 லோக்சபா உறுப்பினர்களையும் கொண்ட இம்மாநிலம் 24 மாவட்டங்களையும் 5 நிர்வாகப் பிரிவுகளையும் கொண்டது. ஹிந்தி பிரதான மொழியாகவும், பெங்காலி, போஜ்புரி, உராவன், மகய், நாக்புரி, ஒடியா, சந்தாலி, உருது பேசப்பட்டுவருகின்றன. முன்நாட்களில் தீவிரவாதிகள் உறைவிடமாகக் காணப்பட்ட இம்மாநிலத்தில், தீவிரவாதங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம். பரஸ்நாத், நெட்டார்ஹட், ராஜ்மஹல் மலை, திரிகுட், தாகூர் மலை போன்றவை இம்மாநிலத்தில் காட்சியளிக்கும் பிரதான மலைகள். இம்மாநிலத்தின் 67 சதவீதத்தினர் இந்து மதத்தினையும், 14 சதவீதத்தினர் இஸ்லாமிய மதத்தினையும், 4.3 சதவீதத்தினர் கிறிஸ்தவ மதத்தினையும், ஏனைய மக்கள் பிற மதங்களையும் தழுவி வாழுகின்றனர். சர்ஹுல், பஹா பரப், கரம் பராப், மாகே பரப், சொஹ்ராய், பந்தனா, துசு பண்டிகை, மகர சங்கராந்தி, நவகானி, துர்கா பூஜை, ஜிதியா, மானச பூஜை, ரத யாத்திரை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, ஹோலி போன்றவை இம்மாநிலத்தில் கொண்டாடப்பட்டுவரும் பண்டிகைகளுள் பிரதானமானவை.


மாவட்டங்கள் மற்றும் மக்கள் தொகை (தோராயமாக)


1 பொகாரோ - 2,062,330 2 சத்ரா - 1,042,886 3 தியோகர் - 1,492,073 4 தன்பாத் - 2,684,487 5 தும்கா - 1,321,442 6 கிழக்கு சிங்பூம் - 2,293,919 7 கர்வா - 1,322,784 8 கிரிதிஹ் - 2,445,474 9 கோடா - 1,313,551 10 கும்லா - 1,025,213 11 ஹசாரிபாக் - 1,734,495 12 ஜம்தாரா - 791,042

13 குந்தி - 531,885 14 கோடர்மா- 716,259 15 லதேஹர் - 726,978 16 லோஹர்டகா - 461,790 17 பாகூர் - 900,422 18 பலமு - 1,939,869 19 ராம்கர் - 949,443 20 ராஞ்சி - 2,914,253 21 சாஹிப்கஞ்ச் - 1,150,567 22 சரிகேலா கர்சவான் - 1,065,056 23 சிம்டேகா - 599,578 24 மேற்கு சிங்பூம் -1,502,338

ஜெபக் குறிப்புகள்


தலைநகர்: ராஞ்சி மக்கள் தொகை: 32,988,134 மதங்கள்: கிறிஸ்தவர்கள்: 4.3% இந்துக்கள்: 67.83% முஸ்லீம்கள்: 14.53% புத்த மதம் : 0.03% சீக்கிய மதம் : 0.22% பிற மதங்கள்: 0.26 % மாவட்டங்கள்: 24 மொழிகள்: ஹிந்தி, பெங்காலி, சந்தாலி, நாக்புரி, உருது, மகய், முண்டாரி, குருக், போஜ்புரி, குர்மாலி, ஒடியா, ஹோ, ஹோர்த்தா


1) இம்மாநில மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட, பின்மாரி ஊற்றப்பட, அந்தகார வல்லமைகள் நிர்மூலமாக ஜெபிப்போம். 2) இம்மாநிலத்தில் உள்ள மால்டோ சந்தால் மக்கள் நடுவே போடப்பட்டுள்ள எழுப்புதல் அக்கினி மாநிலம் எங்கும் பற்றிப் பிடிக்க ஜெபிப்போம். 3) சுவிசேஷத்திற்கு விரோதமான இயக்கங்கள், தீவிரவாதிகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். 4) ஆதிவாசி மக்களில் காணப்படுகின்ற வினோத பாவ பழக்க வழக்கங்கள் மாறவும், ஆவிகளை வணங்குகின்ற கிரியைகள் நிர்மூலமாகவும் ஜெபிப்போம். 5) ஜார்க்கண்டில் உள்ள பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள சபைகளின் ஒற்றுமைக்காக மற்றும் எழுப்புதலுக்காக ஜெபிப்போம். 6) மாவோயிஸ்டுகள், போர் செய்ய எத்தனிக்கும் குழுக்கள் மற்றும் நக்சலைட்டுகளின் மனம் திரும்புதலுக்காக ஜெபிப்போம். 7) இங்கு வறட்சி மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்க ஜெபிப்போம். 8)ஏழை மக்கள் மீதான சுரண்டல் முடிவுக்கு வர ஜெபிப்போம்.


9) மாநிலத்தில் ஊழல் அற்ற நிர்வாகம் அமைய ஜெபிப்போம். 10) அரசியல் தலைவர்கள் மக்களுக்கு நன்மையான சட்டங்களைப் பிறப்பிக்கவும், சேவை செய்யும் மனப்பான்மையோடு செயல்படவும் ஜெபிப்போம். 11) அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் மனநிலை புதிதாக்கப்பட ஜெபிப்போம். 12) ஜாதி வெறி உள்ள மக்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்பட ஜெபிப்போம். 13) சுவிசேஷத்திற்குத் தடையாய் இருக்கிற மதமாற்றத் தடைச் சட்டம் நீங்க ஜெபிப்போம். 14) அனைத்து கிறிஸ்தவர்களும் தங்கள் பொல்லாத வழியை விட்டு மனம் திரும்பி, தேவனின் இரக்கம் ஜார்க்கண்ட் மீது இருக்க ஜெபிப்போம்.


உத்திரப்பிரதேசம்


பரப்பளவில் இந்தியாவின் 4-வது பெரிய மாநிலம் என்றாலும், இந்தியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்டது. சுமார் 24.14 கோடி மக்கள் தொகையைக் கொண்டதாக, மொத்த இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 16.5 சதவீத மக்களை உள்ளடக்கியது இம்மாநிலம். 403 சட்டசபை உறுப்பினர்களையும், 31 இராஜ்யசபா உறுப்பினர்களையும் மற்றும் 80 லோக்சபா உறுப்பினர்களையும் கொண்ட இம்மாநிலத்தில், லக்னோ தலைநகராகவும் மற்றும் பிரயாக்ராஜ் நீதித்துறைத் தலைநகராகவும் செயல்பட்டுவருகின்றன. கங்கை மற்றும் அதன் துணை நதியான யமுனை என்ற இரண்டு பெரிய ஆறுகள் இம்மாநிலத்தில் ஓடுகின்றன. இம்மாநிலம் 18 நிர்வாகப் பிரிவுகளாகவும், 75 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால், சாரநாத் தூண், ஆக்ரா கோட்டை மற்றும் துத்வா தேசிய பூங்கா போன்றவை இம்மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களில் சில. ஹிந்தி இம்மாநிலத்தின் பிரதான மொழியாகவும் மற்றும் உருது, போஜ்புரி, அவாதி, பஞ்சாபி, பெங்காலி, பாக்ஹெலி போன்ற பிற மொழிகளும் இம்மாநில மக்களால் பேசப்படுகின்றன. சத், கும்பமேளா, ஹோலி, தாஸ் மகோத்சவ், கங்கா மகோத்சவ், கார்த்திக் பூர்ணிமா போன்ற பண்டிகைகள் இம்மாநில மக்களால் விசேஷமாகக் கொண்டாடப்படுபவை; இசைக்கும் இம்மாநில மக்கள் மத்தியில் பெரியதோர் வரவேற்பு உண்டு. கோடை காலத்தில் அதிக வெப்பத்தினையும் மற்றும் குளிர் காலத்தில் அதிக குளிரான தட்பவெட்ப நிலையையும் கொண்டது இம்மாநிலம். விவசாயமே இம்மாநில மக்களின் பிரதான தொழில். மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 82 சதவீதம் விளைநிலமாகவும் மற்றும் 65.5 சதவீத நிலங்களில் தொடர்ச்சியாக விவசாயமும் செய்யப்பட்டுவருகின்றன. கோதுமை மற்றும் அரிசி போன்றவைகளே இம்மாநில மக்களின் பிரதான உணவு வகைகள். கங்கை நதியில் நீராடவும், கோவில்களுக்குச் சென்று தரிசிக்கவும் மற்றும் சாதுக்கள், சன்னியாசிகளைச் சந்தித்து ஆசி பெறவும் இம்மாநிலத்திற்கு ஒவ்வொரு நாளும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.‌


மாவட்டங்கள் மற்றும் மக்கள் தொகை (தோராயமாக)


1 ஆக்ரா - 4,418,797 2 அலிகார் - 3,673,889 3 அலகாபாத் - 5,954,391 4 அம்பேத்கர் நகர் -2,397,888 5 அமேதி - 2,050,133 6 அம்ரோஹா - 1,840,221 7 அவுரையா - 1,379,545 8 அசம்கர் - 4,613,913 9 படவுன் - 3,127,621 10 பாக்பட் - 1,303,048 11 பஹ்ரைச் - 3,487,731 12 பல்லியா - 3,239,774 13 பல்ராம்பூர் - 2,148,665 14 பண்டா - 1,799,410 15 பாரபங்கி - 3,260,699 16 பரேலி - 4,448,359 17 பஸ்தி - 2,464,464 18 பிஜ்னோர் - 3,682,713 19 புலந்த்ஷாஹர் -3,499,171 20 சண்டௌலி - 1,952,756 21 சித்ரகூட் - 991,730 22 டியோரியா - 3,100,946 23 எட்டா - 1,774,480 24 எட்டாவா - 1,581,810 25 பைசாபாத் - 2,470,996 26 ஃபரூக்காபாத் - 1,885,204 27 ஃபதேபூர் - 2,632,733 28 ஃபிரோசாபாத் - 2,498,156 29 கௌதம் புத்த நகர் -1,648,115 30 காசியாபாத் - 3,343,334 31 காஜிபூர் - 3,620,268 32 கோண்டா- 3,433,919 33 கோரக்பூர் - 4,440,895 34 ஹமிர்பூர் - 1,104,285 35 ஹாபூர் - 1,338,311 36 ஹர்டோய் - 4,092,845 37 ஹத்ராஸ் - 1,564,708


38 ஜலான் - 1,689,974 39 ஜான்பூர் - 4,494,204 40 ஜான்சி - 1,998,603 41 கன்னௌஜ் - 1,656,616 42 கான்பூர் தேஹாத் - 1,796,184 43 கான்பூர் நகர் - 4,581,268 44 கஸ்கஞ்ச் - 1,436,719 45 கௌசாம்பி - 1,599,596 46 குஷிநகர் - 4,021,243 47 லக்கிம்பூர் கெரி -3,564,544 48 லலித்பூர் - 1,221,592 49 லக்னோ - 4,589,838 50 மகாராஜ்கஞ்ச் -2,684,703 51 மஹோபா - 875,958 52 மெயின்புரி - 1,868,529 53 மதுரா - 2,547,184 54 மௌ - 2,205,968 55 மீரட் - 3,443,689 56 மிர்சாபூர் - 2,496,970 57 மொராதாபாத் - 3,126,507 58 முசாபர்நகர் - 2,869,934 59 பிலிபித் - 2,031,007 60 பிரதாப்கர் - 3,209,141 61 ரேபரேலி - 2,903,507 62 ராம்பூர் - 2,335,819 63 சஹாரன்பூர் - 3,466,382 64 சந்த் கபீர் நகர் -2,199,774 65 சாந்த் ரவிதாஸ் நகர் - 1,715,183 66 சம்பல் - 1,578,213 67 ஷாஜஹான்பூர் -3,006,538 68 ஷாம்லி - 1,273,578 69 ஷ்ரவஸ்தி - 1,117,361 70 சித்தார்த்நகர் - 2,559,297 71 சீதாபூர் - 4,483,992 72 சோன்பத்ரா - 1,862,559 73 சுல்தான்பூர் - 2,249,036 74 உன்னாவ் - 3,108,367 75 வாரணாசி (காசி) -3,676,841


ஜெபக் குறிப்புகள்

தலைநகர்: லக்னோ மக்கள் தொகை: 241,066,874 மதங்கள்: கிறிஸ்தவர்கள்: 0.18% இந்துக்கள்: 79.73% முஸ்லீம்கள்: 19.26% புத்த மதம் : 0.10% சீக்கிய மதம் : 0.32% பிற மதங்கள்: 0.29 % மாவட்டங்கள்: 75 மொழிகள்: ஹிந்தி, உருது, பஞ்சாபி, பெங்காலி, போஜ்புரி


1) இந்தியாவின் ஜனத்தொகையில் முதலிடம் வகிக்கிற இம்மாநில மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட, அறியாமை இருள் நீங்க, மூட பழக்கங்கள் மாற ஜெபிப்போம். 2) பின்மாரி ஊற்றப்பட, அந்தகார வல்லமைகள் நிர்மூலமாக்கப்பட ஜெபிப்போம். 3) பாவங்கள் நீங்குவதற்காக கங்கை நதிக்கு வரும் கோடிக்கணக்கான மக்கள் தேவனை அறிந்துகொள்ள ஜெபிப்போம். 4) மாநிலத்தின் ஊழியர்கள், மிஷனரிகளுக்காக ஜெபிப்போம். 5) சுவிசேஷத்திற்குத் தடையாயிருக்கிற மதமாற்றத் தடைச் சட்டம் நீங்க ஜெபிப்போம். 6) அரசாங்கம் நேர்மையாக மதம் சாராமல் பொறுப்புகளை நிறைவேற்ற ஜெபிப்போம். 7) சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காகவும் சாதி பிரச்சனைகள் மாறவும் ஜெபிப்போம்.


8) அதிகாரிகளுக்காகவும் அரசியல்வாதிகளுக்காகவும் ஜெபிப்போம். 9) அதிகரித்து வரும் உபத்திரவங்களின் மத்தியில் தேவன் இடைபடுவதை தேவப் பிள்ளைகள் உணர ஜெபிப்போம். 10) கிறிஸ்தவர்களின் மீது அதிகப்படியாகச் சுமத்தப்படும் பொய் வழக்குகள், சிறையில் அடைத்தல் ஆகியவை மாற ஜெபிப்போம். 11) மதவாதிகளின் தாக்குதலிலிருந்து சபைகளும், கிறிஸ்தவ நிறுவனங்களும் பாதுகாக்கப்பட ஜெபிப்போம். 12) வேலையில்லாத் திண்டாட்டம் நீங்கவும், அரசாங்கம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் ஜெபிப்போம்.


நமது 'கிறிஸ்துவின் கனிகள்' ஊழியத்தின் சபைகளுக்காக:


பீஹார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், உத்திர பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் எல்லா மாவட்டங்களிலும் கைப்பிரதி, புதிய ஏற்பாடு, தெரு பிரசங்கம் மற்றும் திரைப்படம் மூலம் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எல்லா கிராமங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட, வாசல்கள் திறக்கப்பட, தடைகள் நீங்க ஜெபிப்போம். 1) பாட்னா 2) வைசாலி 3) சீதாமரி 4) லக்கிசராய் 5) மதுபானி 6) அரரியா 7) பூர்னியா 8) கத்திஹார் 9) பக்சர் 10) கயா 11) நவடா 12) கிஷன்கஞ்ச் பிரியமானவர்களே, மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்னும் அதிக சபைகள் எழும்பவும், மற்ற மாவட்டங்களிலும் வாசல்கள் திறக்கப்பட, ஊழியர்கள் எழும்ப, சபைகள் எழும்ப, பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும் பாரத்தோடு ஜெபிப்போமாக.


கிறிஸ்துவின் கனிகள் மிஷனரி ஊழியத்தின் ஜெபக்குறிப்புகள்


1) தேவன் கொடுத்த தரிசனத்தின் படி நான்கு மாநிலங்களிலும் (பீஹார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் உத்திர பிரதேசம்) குறைந்தது 10 கோடி மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட, தேவன் அதற்கான வழி வாசல்களைத் திறக்கவும், தைரியமாய்ச் சுவிசேஷத்தை அறிவிக்கக்கூடிய கிருபையையும் மேலும் அதற்குத் தேவையான உபகரணங்கள் வாகனம், ப்ரொஜெக்டர், ஜெனரேட்டர், கைப்பிரதி, புதிய ஏற்பாடு இதன் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போமாக. 2) அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் வேத வசனம் உறுதிப்பட ஜெபிப்போமாக. 3) சுதேச மிஷனரி ஊழியர்கள் எழும்பப்பட ஜெபிப்போமாக. 4) குறைந்தது 1500 சபைகள் கட்டப்படவும், அதனுடைய தேவைகள் சந்திக்கப்படவும் கொடுக்கிற கரங்களை தேவன் எழுப்பவும் ஜெபிப்போமாக. 5) வேதாகமப் பயிற்சிக் கூடத்திற்கான இடம் மற்றும் கட்டுமானத்திற்காகக் கொடுப்பவர்கள் எழும்பவும் ஜெபிப்போமாக. 6) மிஷனரிகளின் ஊழியம், குடும்பம் பாதுகாக்கப்பட, தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போமாக. 7) மிஷனரிகளின் பிள்ளைகளின் படிப்பு மற்றும் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போமாக.


8) தரிசனத்தோடு இணைந்து செயல்படுகிற ப்ரோமோஷனல் ஒர்க்கர்ஸ் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எழும்ப ஜெபிப்போமாக. 9) வட இந்திய இரட்சிப்பிற்காக ஜெபிக்கக் கூடிய ஜெப வீரர்கள் எழும்ப ஜெபிப்போமாக. 10) இதுவரை நான்கு மாநிலங்களிலும் நாம் சுவிசேஷம் அறிவித்த 1700 கிராமங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போமாக. 11)தற்போதுள்ள 125 சபைகளுக்காக, விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்பட, சாட்சியாய் வாழ , பரலோகத்திற்கு பங்கு உள்ளவர்களாய் உருவாக ஜெபிப்போமாக. 12) நமது பணித்தளங்களில் சில காரணங்களினால் மூடப்பட்ட திருச்சபைகள் மீண்டும் திறக்கப்பட ஜெபிப்போமாக. 13) ஜெபப் பங்காளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் தாங்கக் கூடியவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சி, குடும்பத்தினருடைய இரட்சிப்பு,சுகம், கையின் பிரயாசம் மற்றும் பாதுகாப்பிற்காக ஜெபிப்போமாக. 14) சுவிசேஷத்தையும் சபை நிறுவுவதையும் மையமாகக் கொண்டு செயல்படும் மற்ற மிஷனரி ஸ்தாபனங்களின் தரிசனங்கள் நிறைவேறவும், ஊழிய வளர்ச்சிக்காகவும், ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போமாக.

மிஷனரிகளுக்காக ஜெபம்


1) மிஷனரிகள் தேவனோடு இணைந்து செயல்படும் நேரத்தை ஒருபோதும் பிசாசானவன் தடை செய்யாமலிருக்க (வேதம், வேத தியானம்). 2) மிஷனரிகள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு கனி நிறைந்த ஊழியம் செய்ய. 3) மிஷனரிகளின் தனிப்பட்ட பரிசுத்த வாழ்விற்காகவும், சாட்சியுள்ள வாழ்விற்காகவும். 4) ஒவ்வொரு மிஷனரிகளும் தாங்கள் ஊழியம் செய்யும் பணித்தளத்தில் ஆத்ம பாரம், குறிக்கோள் மற்றும் இலக்கோடு செயல்பட. 5) மிஷனரிகள் தங்களது அழைப்பிலும் தரிசனத்திலும் கடைசிவரை உறுதியாய் நிற்க. 6) ஒவ்வொரு மிஷனரியும் தனது உடன் மிஷனரிகளுடன் அன்போடும் குழு மனப்பான்மையோடும் செயல்பட. 7) மிஷனரிகள் தங்களது ஊழியத்தை கடமைக்காக செய்யாமல் முழு அர்ப்பணிப்போடு செய்யும்படி. 8) மிஷனரிகள் தங்கள் ஊழியம் செய்யும் பணித்தளத்தில் உள்ள கலாச்சாரத்தினால் பாதிக்கப்படாமலிருக்க (மொழி, உணவு, உடை சூழ்நிலை...).


9) மிஷனரிகள் சோர்வுறாமல் முன்னேறிச் செல்ல (பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறந்தோர்,உறவுகள், நண்பர்கள், இவர்களின் பிரிவுகள், அடிக்கடி சுகவீனமடைதல், பணத்தேவைகள், பணித்தளத்தில் கனியின்மை இன்னும் பல காரணங்களினால்). 10) மிஷனரிகளின் ஆரோக்கியத்திற்காகவும் உள்ளத்தில் உள்ள காயங்கள் ஆற்றப்படவும். 11) மிஷனரிகள் விசுவாசத்தில் பெலப்படவும், பணித்தளங்களில் அநேக அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கவும். 12) மிஷனரிகள் பணித்தளங்களில் பயமின்றி தைரியமாய் நிற்கவும், அறிவிக்கவும், செயல்படவும். 13) கல்விக்காக பெற்றோரை விட்டு பிரிந்திருக்கும் மிஷனரிகளின் பிள்ளைகள் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்க. 14) மிஷனரிகளின் பிள்ளைகளது கல்வித் தேவைகள் சந்திக்கப்பட (சரியான பள்ளிகள், விடுதிகள், கல்லூரிகள் மற்றும் நிதித் தேவைகள்). 15) படித்து முடித்த மிஷனரிகளின் பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க. 16) திருமண வயதில் உள்ள மிஷனரி மற்றும் மிஷனரிகளின் பிள்ளைகளுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைக்க. 17) மிஷனரிகளின் பெற்றோர்களை தேவன் பொறுப்பெடுத்து வழிநடத்த ஜெபிப்போம்.


பங்காளர்களுக்காக ஜெபம்


சரீர சுகம், ஆரோக்கியம், பெலன், பாதுகாப்பு. தினசரி உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட. சரிவிகித உணவு சரியான நேரத்தில் கிடைக்கப் பெற. நல்ல வேலை கிடைக்க, கிடைத்த வேலையை நேர்த்தியாய்ச் செய்ய, கடினமாய் உழைத்திட. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க. கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்த. தேவைக்கு அதிகமாகக் கடன் வாங்காமல், கடன் வாங்கியிருந் தால் அதை சீக்கிரமாய் அடைத்துவிட. கர்த்தர் கொடுத்ததில் திருப்தி அடைய. கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள. சுகத்திலும், துக்கத்திலும் இருவரும் சேர்ந்து நடைபோட. பாலுறவில் பரிசுத்தம் காணப்பட . முறிந்த குடும்பங்களுக்கு இவர்கள் நல்லதொரு மாற்று மருந்தாக செயல்பட. முறிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்திட. குடும்பத்தில் சண்டை இல்லாமல் சமாதானம் நிலைத்திட. கர்ப்பத்தின் கனிக்காகக் காத்திருக்கும் தம்பதியருக்கு, கர்ப்பத்தின் கனியினைக் கொடுத்து ஆசீர்வதிக்க.


குடும்ப ஜெபம் கிரமமாய் நடந்திட. கர்த்தர் கொடுத்த ஊழியத்தை, தரிசனத்தை கடைசி மூச்சு இருக்குமட்டும் நிறைவேற்ற. கணவன் மனைவி சேர்ந்து கைகோர்த்து ஊழியத்தை உற்சாகமாய்ச் செய்ய. பிள்ளைகளை ஆவிக்குரிய விதத்தில் வளர்த்து அவர்களை ஆளாக்கிவிட . பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் வளர்க்க. எதிர்காலத்தைக் குறித்தான கவலை வாட்டும்போது, ஒடுக்கும் போது ஊழியத்தில் ஒத்தாசை இல்லாதிருக்கும்போது, தனிமை, சோர்வு, ஏன் இந்த ஊழியம் என்ற விரக்தி இல்லாமல், சோர்ந்து போகாமல் உற்சாகமாய் ஊழியம் செய்ய. வியாதி, சோர்வு,கடன், எதிரிகளின் பயமுறுத்தல், பிள்ளைகளின் தேவைகள் போன்ற இவைகள் நெருக்கும்போது கர்த்தர் உடனிருந்து தேற்றிட, அரவணைத்திட ஜெபிப்போம். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீட்டை தேவன் அருளிட. பங்காளர்களின் பிள்ளைகள் ஞானத்தில் சிறந்து விளங்கிட. படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைத்திட. திருமண வயதை எட்டின பிள்ளைகளுக்கு ஏற்ற துணை அமைந்து திருமணம் நடந்திட.



மிஷனரி பிள்ளைகளின் படிப்பிற்காக

‌‌ 'கிறிஸ்துவின் கனிகள்” மிஷனரி ஊழியத்தின் பணித்தளங்களில் ஊழியம் செய்கிற> கஷ்டப்படுகிற ஊழியர்களின் பிள்ளைகளுடைய படிப்பு மற்றும் அவர்களது எதிர்காலம்> பொருளாதாரக் குறைவினாலும்> ஊழியர்கள் வாழும் பகுதியில் அரசாங்கப் பள்ளிகளின் தரக் குறைவினாலும் மிகவும் கேள்விக் குறியாக இருக்கிறது.‌ இந்த வருடம் (2024-ல்) பீஹாரில் இருக்கும் நமது ஒரு ஊழியரின் குழந்தையை தமிழ்நாட்டில் அரக்கோணம் பகுதியில் இருக்கும் கிங்ஸ் அண்ட் குயின்ஸ் ரெசிடென்ஷியல் பள்ளியில் (1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ளது) படிப்பிற்காகச் சேர்த்துள்ளோம். ஒரு குழந்தையின் படிப்புச் செலவு வருடத்திற்கு குறைந்தது 50>000 முதல் 60>000 ஆகின்றது. இன்னும் அநேக ஊழியர்களின் குழந்தைகள் இச்சூழ்நிலையில் தான் இருக்கின்றனர். ஆகையால் தாங்கள் மிஷனரி பிள்ளைகளின் படிப்பிற்காக> பெற்றோர்களை விட்டு தூர இடத்தில் புதியதோர் பாஷை பேசுகிற இடத்திற்கு வந்து தங்கிப் படிக்கின்ற பிள்ளைகளின் மனநிலை> ஆவிக்குரிய நிலை பாதிக்கப்படாமல் இருக்கவும்> அவர்களது சுகம் மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்கள் அனுதின ஜெபங்களிலும் சபை ஜெபங்களிலும் ஜெபிக்கும்படி அன்பாய் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இக்காரியத்திற்காக உதவ விரும்புவோர் சகோதரர். பி.ஜெயபால் (கிறிஸ்துவின் கனிகள் மிஷனரி ஊழியத்தின் பொருளாளர்) அவர்களை தொடர்பு கொள்ளலாம். கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.

இவ்வூழியத்தில் உங்கள் பங்கு

எமது வங்கி விபரங்கள்

கிறிஸ்துவின் கனிகள் மிஷனரி ஊழியத்திற்காக தினமும் தனியாக மற்றும் சபையாக ஜெபிப்பேன். இவ்வூழியத்தின் ஏதாவது ஒரு பணியில் கலந்துகொள்ள அர்ப்பணிக்கிறேன்.

உங்கள் முகவரி, E-Mail மற்றும் Mobile No. ஆகியவற்றினையும் குறிப்பிட மறவாதீர்கள். காணிக்கை பெற்றுக்கொண்டவுடன் அதற்கான ரசீது அனுப்பி வைக்கப்படும்.

அறிந்துகொள்ளுவோம் ஜெபிப்போம்

நமது Fruits of Christ - Spiritual Trust ஆக இருப்பதினால் அதிகமாக உதவும் காரியங்களில் செலவு செய்ய இயலாத காரணத்தினாலும், நண்பர்கள் சிலர் IT reduction certificate கேட்கிறபடியினாலும் 'குட் சமாரிட்டன் வெல்ஃபேர் டிரஸ்ட்' (Good Samaritan Welfare Trust) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் கொடுக்கக்கூடிய காணிக்கை இயற்கைப் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவிடவும், ஏழை ஊழியர்கள், ஏழை விசுவாசிகளின் பெண் பிள்ளைகளின் திருமண காரியத்திற்கு உதவிடவும், ஊழியர்களின் பிள்ளைகளின் படிப்பு மற்றும் மருத்துவ உதவிகளுக்காகவும் மற்றும் இது போன்ற இதர உதவிகளுக்காகவும் செலவிடப்படும். பிரியமானவர்களே, தங்கள் ஜெபங்களிலே இக்காரியங்களுக்காக ஜெபிக்கும்படி அன்பாய் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இது போன்ற நற்கிரியைகளுக்கு உதவ நினைப்போரும் மற்றும் IT reduction certificate பெற விரும்புவோரும் கீழ்க்கண்ட எங்களது வங்கி எண்ணிற்கு தங்களுடைய காணிக்கையை அனுப்பலாம். இதனைப் பற்றிய மேலும் விபரங்களுக்கும், காணிக்கை அனுப்பின பின்பு தவறாமல் தங்கள் ரசீதைப் பெற்றுக் கொள்வதற்கும் சகோ.ஜெயபால் (கிறிஸ்துவின் கனிகள் மிஷனரி ஊழியத்தின் - பொருளாளர்) அவர்களை தொடர்பு கொள்ளும்படி அன்பாய் கேட்டுக் கொள்கிறோம். தொடர்பு எண்:- சகோ. பி.ஜெயபால் - +919443002420 +918608717740 சகோ. வினோத் - +918210288644 வங்கி விபரம்:- TMB Bank A/c Name : Good Samaritan welfare trust A/c No. : 035100050312861 IFSC : TMBL0000035 Tuticorin Branch


கிறிஸ்துவின் கனிகள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்


சகோதரரைப் பற்றி...

சகோதரர் வினோத் (ஸ்தாபகர் - கிறிஸ்துவின் கனிகள் மிஷனரி ஊழியங்கள்), தென்னிந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி பட்டணத்தில், திரு. பெர்னாட் மற்றும் திருமதி ஐரீன் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தேவ பயமுள்ள தாயாரால் வளர்க்கப்பட்டாலும், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்து, தொழிற்கல்வி பயின்றார். 1997 இல், தூத்துக்குடியில் உள்ள பிரபலமான ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டில், தன்னுடைய தாயாரின் வற்புறுத்துதலினால், தங்களுடைய சபையின் மூலமாக நடத்தப்பட்ட வாலிபர் முகாமில் கலந்துகொண்டார். அந்த முகாமில், தேவனுடைய அன்பினால் தொடப்பட்டு, தன்னுடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்பினார். தன்னைப் போல பாவத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிற மனிதர்களுடைய இரட்சிப்பிற்காக தன்னை அர்ப்பணித்தார். தகுதியில்லாத அவரை, தேவன் தன்னுடைய ஊழியத்திற்கென்று பிரித்தெடுத்தார். 2005 ஆம் ஆண்டில், சகோதரி அஜெய்தாவை திருமணம் செய்தார். கர்ப்பத்தின் கனி தாமதமாகவே, தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தபோது, சகோதரருடைய ஊழிய அர்ப்பணிப்பை தேவன் நினைவுபடுத்தினார். தன்னுடைய ஊழிய அழைப்பை உறுதிசெய்யும் அடையாளமாக, தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் மிஷனரியாக வட இந்தியாவிலும், மற்றும் பெண் குழந்தை பிறந்தால் தன்னுடைய வேலையை செய்துகொண்டே பகுதி நேரமாக தன்னுடைய சபையிலே போதகரோடு இணைந்து ஊழியம் செய்வதாகவும் ஜெபித்தார். கர்த்தருடைய பெரிதான கிருபையினாலே, 2008 ஆம் ஆண்டு மிஷனெரி ஊழிய அழைப்பின் அடையாளமாக ஆண் குழந்தையை தேவன் கொடுத்தார். தன்னுடைய வேலையை இராஜினாமா செய்ய முடிவெடுத்தபோது, அவர் வேலை செய்த நிறுவனம் அவருடைய மாதச் சம்பளத்தை ரூபாய் 40,000 -த்திலிருந்து ரூபாய் 70,000 ஆக உயர்த்தியது. ஆனாலும், தேவனுடைய திட்டத்தின்படி 25 ஆண்டுகளுக்குள் 10 கோடி மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டுமென்ற உறுதியான தீர்மானத்துடன், விசுவாசத்தோடு தன்னுடைய வேலையை இராஜினாமா செய்தார். "இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (2 இராஜாக்கள் 3:16,17) என்ற வார்த்தையைக் கொடுத்து, ‘FRUITS OF CHRIST’ (கிறிஸ்துவின் கனிகள்) என்ற ஊழியத்தை ஆரம்பிக்க தேவன் வழிநடத்தினார். 2012-ம் ஆண்டு ஜுலை முதற்கொண்டு, பீஹார், மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறார்.


Comments

Popular posts from this blog

kavithai